பழுதான சாலையை சரி செய்ய வேண்டும்
பழுதான சாலையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மேட்டு தெரு மாரியம்மன் கோவில் எதிரில் ஏரிக்கரை வழியாக செல்லும் தார் சாலை கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெய்த மழையின் போது உடைக்கப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் வாரச்சந்தை நடக்கும். சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் சாலையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.