பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர் அருகே பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-08-10 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே மேலகொடுமலூர் கிராமத்தில் உள்ள குமரக்கடவுள் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக பால்குடம், பறவை காவடி எடுத்து சென்றனர். இதை தொடர்ந்து குமரக்கடவுளுக்கு பால், தயிர், இளநீர், அரிசி மாவு, பன்னீர், விபூதி, கரும்புச்சாறு, தேன், நெய், உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்கார, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்