வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்

வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அறிவுறுத்தினார்.

Update: 2022-12-22 18:45 GMT

வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், அரசு போக்குவரத்துதுறை ஆணையருமான நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நலத்திட்டங்கள்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற எண்ணற்ற அரசின் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நலத்திட்ட உதவிகள் உரியவர்களுக்கு கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்