இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்பட்டது

கொள்ளிடம் அருகே தாண்டவன்குளத்தில் இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்பட்டது.

Update: 2023-05-25 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தாண்டவன்குளத்தில் இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்பட்டது.

சிறுவாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் இயேசு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் சிறு வாய்க்கால் ஒன்று செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து வயல் வெளிகளுக்கு செல்வதற்கு வாய்க்காலில் இறங்கி சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் சிறு வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

பாலம் கட்டி முடிக்கப்பட்டது

இந்த பணி நடைபெற்று கொண்டிருந்த போது ஒருநாள் இரவு யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் சிலர் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி பாலத்தை இடித்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் தர்மலிங்கம் புதுப்பட்டினம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தையும் நடைபெற்றது. பின்னர் பாலம் உடைக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பாலம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்