நாய்கள் துரத்தி கடித்ததில் மான் செத்தது

நாய்கள் துரத்தி கடித்ததில் மான் செத்தது.

Update: 2023-05-04 19:31 GMT

பெரம்பலூர்-துறையூர் சாலையில் நேற்று வழித்தவறி வந்த ஒரு மானை அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் சேர்ந்து துரத்தி சென்று கடித்தன. இதில் காயத்துடன் தப்பிய மான் பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடி வந்தது. இதனைக்கண்ட மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த மானை ஒரு மரத்தில் கட்டி வைத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர். இறந்தது ஆண் மான் என்றும், அதற்கு 1 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்