மொபட்டில் தவறி விழுந்து டீ மாஸ்டர் பலி

மோகனூர் அருகே மொபட்டில் தவறி விழுந்து டீ மாஸ்டர் இறந்தார்.

Update: 2023-01-26 19:31 GMT

மோகனூர்

கரூர் மாவட்டம், சனப்பிரட்டில் தொழிற்பேட்டை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கதிர்வேல் (வயது 58). இவர் தாந்தோன்றி மலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சின்ன பள்ளிபாளையத்தில் இவரது தம்பியின் நினைவு நாளையொட்டி சாமி கும்பிடுவதற்காக மொபட்டில் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. கதிர்வேல் குடும்பத்தினர் உறவினரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் ஊருக்கு வருவதாக கிளம்பி சென்று விட்டார் என கூறியுள்ளனர். இந்த நிலையில் மோகனூர் அருகே உள்ள சூலக்கன்னி முடக்கில், உள்ள ஒரு பள்ளத்தில் மொபட்டுடன் ஒருவர் கீழே கிடப்பதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் கதிர்வேலின் போனில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கதிர்வேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனார். இது குறித்து கதிர்வேல் மனைவி சுசிலா (55) மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்