உயிரிழந்த குரங்குக்கு மனிதர்களைபோல் இறுதிச்சடங்கு ெசய்த கிராம மக்கள்
உயிரிழந்த குரங்குக்கு மனிதர்களைபோல் கிராம மக்கள் இறுதிச்சடங்கு ெசய்தனர்.
உயிரிழந்த குரங்குக்கு மனிதர்களைபோல் கிராம மக்கள் இறுதிச்சடங்கு ெசய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரத்தை அடுத்த அக்ராவரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அதில் வயது முதிர்வால் குரங்கு ஒன்று கோவில் அருகே இறந்து கிடந்தது. இதைப் பார்த்த கிராம மக்கள் உயிரிழந்த குரங்கை மீட்டு மனிதர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதுபோல் அனைத்துச் சடங்குகளையும் செய்து மஞ்சள்நீர் ஊற்றி குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு மேள, தாளங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்து ஊர்வலமாகக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
குரங்கு என நினைக்காமல் மனிதாக பாவித்து கிராம மக்கள் குரங்குக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்த சம்பவம் பலரின் பாராட்டுகளை பெற்றது.