கிரிவலப் பாதையில்குளத்தில் பிணமாக கிடந்த சாமியார்

கிரிவலப் பாதையில்குளத்தில் சாமியார் பிணமாக கிடந்தார்.

Update: 2023-10-01 10:51 GMT

கிரிவலப் பாதையில்குளத்தில் சாமியார் பிணமாக கிடந்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான குளங்கள் உள்ளன. இதில் ஒன்றான திருநேர் அண்ணாமலை கோவில் குளத்தில் நேற்று காலை சாமியார் ஒருவர் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறந்து கிடந்த சாமியாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் காஞ்சீபுரம் மாவட்டம் சின்னக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 53) என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்