வீட்டின் மொட்டை மாடியில் பிணமாக கிடந்த என்ஜினீயர்
திருச்செந்தூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் என்ஜினீயர் பிணமாக கிடந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் என்ஜினீயர் பிணமாக கிடந்தார்.
என்ஜினீயர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகடி மெயின் ரோடு மச்சோகல்லி காலனியை சேர்ந்தவர் மைலரப்பா (வயது 55). இவர் திருச்செந்தூர் அருகே சண்முகபுரத்தில் தங்கியுள்ளார். இவர் உடன்குடி கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பணியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
கடந்த 8-ந் தேதி நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு, 13-ந் தேதியில் இருந்து பணிக்கு சென்றார். கடந்த 17-ந் தேதி பணியை முடித்து வீட்டிற்கு சென்ற மைலரப்பா பின்னர் வேலைக்கு செல்லவில்லை.
மொட்டை மாடியில் பிணம்
இதையடுத்து சக ஊழியர்கள், மைலரப்பா தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் அவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மைலரப்பா மகன் ரஜினிகாந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மைலரப்பா உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.