தினத்தந்தி புகார் ெபட்டி

தினத்தந்தி புகார் ெபட்டி

Update: 2023-03-05 18:45 GMT

பாதசாரிகள் அவதி

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி சந்திப்பில் இருந்து கோட்டார் செல்லும் சாலையில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து மூடப்பட்டது. ஆனால், ஒரு இடத்தில் சரியாக பள்ளத்தை சீரமைக்க வில்லை. பெரிய காங்ரூட் கற்களை பாதையில் போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த கற்களை அகற்றி, பள்ளத்தை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கென்னடி, கோட்டார்.

விபத்து அபாயம்

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

சுகாதார சீர்கேடு

திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் ேதங்கி நிற்கிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது ரபீக், திட்டுவிளை.

எரியாத மின்விளக்கு

குலசேகரபுரத்தில் இருந்து ஈத்தங்காடு செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், குலசேகரபுரம்.

தடுப்பு அமைக்க வேண்டும்

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆசிராமம் பகுதியில் பழையாற்றின் ஓரமாக அலுமினியத்திலான தடுப்புகள் இரு இடங்களில் இல்லாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இரு பகுதிகளிலும் அலுமினியத்திலான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

அடிக்கடி விபத்து

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட சாலையில் கீழ்குளம் பிடாகை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் மீது வெள்ளை பெயிண்ட் பூசப்படாததால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வெள்ளை பெயிண்ட் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆஷிகா, கீழ்குளம் பிடாகை.

தூர்வாரப்படுமா?

தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீரகேரளம்பேரேரிக்குளம் உள்ளது. இந்த குளத்து நீர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஊர் மக்களுக்கும், பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது. தற்போது குளத்தின் அனைத்து படித்துறையிலும் ஆகாய தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஆகாயதாமரைகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜீவா, தாழக்குடி.

---


Tags:    

மேலும் செய்திகள்