கிரேன் கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்
கிரேன் கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்
முசிறியில் இருந்து நாமக்கல் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தொட்டியம் காட்டுப்புத்தூர் பிரிவு சாலை அருகே பழமையான வேப்ப மரத்தை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் திருச்சி-சேலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் கிரேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.