மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்து நாசம்

மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்து நாசமானது.

Update: 2023-07-22 18:59 GMT

கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், விவசாயி. நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜெய்சங்கர் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீமளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்