நல்லம்பள்ளி அருகேமின்னல் தாக்கி மாடு செத்தது
நல்லம்பள்ளி அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே டொக்குபோதனஅள்ளி ஊராட்சி பச்சைவீட்டுகோட்டாய் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மாட்டை, சின்னபெரமன் ஏரியில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மாட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.