வேடசந்தூரில் விஸ்வகர்மா நகரை சேர்ந்த விவசாயி நடராஜன். இவர் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுமாடு ஒரே நேரத்தில் 2 அழகான காளை கன்றுக்குட்டியை ஈன்றது. பசு, காளை கன்றுகளும் நல்ல நிலையில் உள்ளன. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தனா்.