கால்வாயில் தவறி விழுந்த பசு
நத்தத்தில் கால்வாயில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் ஆடு, மாடு வியாபாரம் செய்து வருகிறார். மேலும் அவர் வீட்டின் அருகில் கொட்டகை அமைத்து பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அவரது பசுமாடு நேற்று அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தது. அப்போது கால்வாயில் இருந்து மேலே வரமுடியாமல் பசுமாடு தவித்தது. இதனை பார்த்த கண்ணன், நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி கால்வாயில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி மீட்டனர்.