ராஜகால்வாயில் தவறி விழுந்த மாடு

ஓசூர் ராஜகால்வாயில் தவறி விழுந்த மாட்டை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2022-10-14 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ராஜகால்வாயில் நேற்று காளை மாடு ஒன்று தவறி விழுந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் மாது தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி, கயிறு கட்டி மாட்டினை மீட்டனர். இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளை உண்பதற்காக வரும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள், தவறி ராஜகால்வாயில் விழுந்து விடுகின்றன. இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்