ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-09-14 22:36 GMT

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த ஊ.மாரமங்கலம் பள்ளக்காட்டூரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் அஜித் (வயது 22). என்ஜினீயரான இவர், சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்துள்ளார். இவரும், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சீனிவாசன் மகள் ரூபினி (19) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ரூபினி பிளஸ்-2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் பொம்மிடியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ரூபினியை, அஜித்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்