குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்

தட்டார்மடம் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2022-08-22 15:13 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை மோடி நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது குடிசை வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே முத்துகுமார் குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

இதற்கிடையே முன்விரோதம் காரணமாக தனது வீட்டுக்கு சிலர் தீ வைத்ததாக முத்துகுமார், தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்