கொரோனா தடுப்பு நடவடிக்கை செலவினங்களை தணிக்கை துறை ஆய்வு செய்ய வேண்டும்-உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றம் உத்தரவு

சிவகங்கை நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை தணிக்கை துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-06-02 16:31 GMT

சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை தணிக்கை துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாரணை

சிவகங்கை நகராட்சியில் கடந்த 2020 மார்ச் முதல் 2021 ஜூலை வரை கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது ரூ.1 கோடியே 20 லட்சம் செலவிடப்பட்டு உள்ளதாகவும், இதில் முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா கால அத்தியாவசியப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் இரா. சோனைமுத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றம்(நடுவம்) விசாரணை செய்தது.

அதனடிப்படையில், மேற்கண்ட புகார் குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைத்து சிவகங்கை நகராட்சியில் கொரோனா கால செலவினங்கள் குறித்து அனைத்து வகையான கோப்புகளையும் ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை

இதுகுறித்து முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் இரா.சோனைமுத்து கூறியதாவது:-

சிவகங்கை நகராட்சியில் கொரோனா கால கட்டத்தில் முககவசம், கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் அளித்தேன். அதன்பேரில், சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்திருந்தனர். இதையடுத்து, உள்ளாட்சி முறைமன்ற நடுவர் மாலிக் பெரோஸ்கான் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். இதை தொடர்ந்து அனைத்து வகையான கோப்புகளையும் ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சிவகங்கை நகராட்சியில் கொரோனா கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதற்காக செலவு செய்த செலவினங்களை உரிய ஆவணங்களுடன் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலர்கள் சிறப்பு ஆய்வு செய்ய வேண்டும். தணிக்கை அறிக்கையில் விதிமீறல்கள், தவறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் தவறுகளுக்கு காரணமான அனைத்து அலுவலர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனருக்க

Tags:    

மேலும் செய்திகள்