சிவகிரி:
சிவகிரியில் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழைய போலீஸ் நிலையம் அருகே தனியார் ஒர்க்ஷாப் பின்புறம் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிவகிரி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், சிவகிரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் நவமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர், காவி வேட்டியும், காவி நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.