பள்ளிகளில் சமையல் கூடம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

நெல்லை பள்ளிகளில் சமையல் கூடம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.

Update: 2022-09-10 20:20 GMT

தமிழக அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த காலை சிற்றுண்டி தயார் செய்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக சமையல் கூடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் டவுன் பாரதியார் உயர்நிலைப்பள்ளி, சந்திப்பு மேலவீரராகவபுரம் மாநகராட்சி பள்ளி, மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளி ஆகிய 3 இடங்களில் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் மைய சமையல் கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்