சாலையோர தடுப்பு சுவரில் மோதி சமையல் மாஸ்டர் பலி
மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையோர தடுப்பு சுவரில் மோதி சமையல் மாஸ்டர் பலியானார்.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் முகேஸ்வரன் (வயது 28). இவர் வேலூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். முகேஸ்வரனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். சேண்பாக்கம் பகுதியில் சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலையில் சென்றபோது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.