பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் சாவு

பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-23 21:51 GMT

துறையூர்:

துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து(வயது 59). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 21-ந் தேதி வேலை முடிந்து சிறுகுடிக்கு திருச்சியில் இருந்து அரசு பஸ்சில் வந்தார். சிறுபத்தூர் பகுதியில் இருந்து வீரானி நோக்கி அந்த பஸ் சென்ற நிலையில், பின்பக்க இருக்கையில் இருந்து முன்னோக்கி முத்து சென்றார். அப்போது அந்த பஸ் ஒரு வளைவில் திரும்பியபோது பஸ்சில் இருந்து முத்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்