இந்தியாவில் பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வருவது பொருந்தாது

இந்தியாவில் பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வருவது பொருந்தாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் பேட்டி அளித்தார்

Update: 2022-11-03 18:45 GMT

மயிலாடுதுறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 25-ம் ஆண்டு விழாவையொட்டி அடுத்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார். இந்த மாநாட்டில் சமய நல்லிணக்கம், நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட 25 தியாகிகளை கவுரவிக்க உள்ளோம். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருவது பொருந்தாது. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது பிரச்சினையை சொல்லி ஆட்சிக்கு வர பா.ஜ.க. நினைக்கிறது. தமிழக அரசின் மீது வீண் பழியை சுமத்தி குழப்பதைதை ஏற்படுத்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நினைக்கிறார். எங்களை பொறுத்தவரை தி.மு.க. அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்