கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காங்கேயன் தலைமை தாங்கினார். செயலாளர் பாரி, பொருளாளர் முரளி, மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் (கட்டுமானம்) உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் வீரபத்திரன் (தையல்), சரவணன் (ஆட்டோ) உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்த வேண்டும். ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்திட வேண்டும். பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகையை 1-ம் வகுப்பிலிருந்தே வழங்க வேண்டும். விபத்து கால வேலை இழப்பு நாட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்