மனுநீதி நாள் முகாமிற்கு அரசு பஸ்சில் சென்ற கலெக்டர்

மனுநீதி நாள் முகாமில் கலந்து கொள்ள அரசு பஸ்சில் கலெக்டர் சென்றார்.

Update: 2022-11-09 20:29 GMT

அரவக்குறிச்சி வட்டம், சேந்தமங்கலம் கீழ்பாக்கம் கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கரூரில் இருந்து கீழ்பாக்கம் கிராமத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் சென்றார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, தனித்துணை கலெக்டர் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் மனுநீதி முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் அரசு பஸ்சில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த கலெக்டரை அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்