சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்
கலவையில், நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆகியோர் மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு சில இடங்களை மாற்றி அமைக்குமாறு ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலவை தாசில்தார் இந்துமதி உள்பட பலர் உடன் இருந்தனர்.