பனை விதைகளை கலெக்டர் பார்வையிட்டார்
வாழைப்பந்தல் கிராமத்தில் பனை விதைகளை கலெக்டர் பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் முடிவு செய்துள்ளார். இது சம்பந்தமாக ஒரு வாரமாக கலெக்டர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பனை மர விதைகளை 100 நாள் வேலை செய்யும் ஆட்களை கொண்டு சேகரித்து வைத்துள்ளார். நேற்று கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் கமண்டல நாகநதி மேம்பாலத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 290 பனை விதைகளை உலர்த்தி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் பார்வையிட்டார். கலவை தாசில்தார் சமீம், ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தரி கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர்
கலவை பகுதியில் சொரையூர், பொன்னமங்கலம், சஞ்சீவிபுரம் போன்ற இடங்களில் அதிக பனை மரம் உள்ளதால் இங்கு பனை விதைகள் அதிக அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.