குருமலை மலைக்கிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு சாலை வசதி செய்வது குறித்து நடந்தே சென்று பார்வையிட்டார்

குருமலை மலைக்கிராமத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2022-05-28 19:40 GMT

அடுக்கம்பாறை

குருமலை மலைக்கிராமத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.

நடந்து சென்ற கலெக்டர்

வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருமலை மலைக்கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மலைக் கிராமத்துக்கு புதிதாக போடப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்தார். தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, துணை சுகாதார நிலையம் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் குருமலை கிராமத்தில் இருந்து வெள்ளைக்கல் மலைக் கிராமத்துக்கு சாலை அமைப்பது தொடர்பாக கிராமத்துக்கு கலெக்டர் நடந்தே சென்று பார்வையிட்டார். அப்போது மலைவாழ் இளைஞர்கள், எங்களுக்கு வேலை வாய்ப்பு வசதி செய்து தர வேண்டும், என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த கலெக்டர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.

கொள்முதல் நிலையம்

அதைத்தொடர்ந்து கலெக்டர் ஊசூரில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சன்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், விவசாய சங்க தலைவர் பெருமாள்ரெட்டியார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், நெல் கொள்முதல் நிலைய பணியாளர் அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்