அமைச்சர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
ஏலகிரி மலையில் அமைச்சர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலை கோடை விழா அரங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி மணி அளவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதனை முனஅனிட்டு அமைச்சர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், முருகேசன், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.