மூத்த வாக்காளரை கலெக்டர் கவுரவித்தார்

திருவாரூரில் முதியோர் தினத்தில் மூத்த வாக்காளரை கலெக்டர் கவுரவித்தார்

Update: 2022-10-01 18:45 GMT

திருவாரூர்:

முதியவர்களை பாதுகாக்கும் வகையில் முதியோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று முதியோர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் தண்டலை ஊராட்சி கூட்டுறவு நகர் வைகாசி தெருவில் வசித்து வரும் மூத்த வாக்காளரான வெங்கடாசலம் (வயது 97) என்பவரை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரால் வழங்கப்பட்ட கடிதத்தை வழங்கினார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன், ஊராட்சி தலைவா நாகராஜன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்