கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை பலி: காப்பாற்ற குதித்த தாயும் உயிரிழந்த பரிதாபம்

கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தை பலியானது. காப்பாற்ற குதித்த தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-15 21:05 GMT

சேலம்,

சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகர் வாத்தியார் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (வயது 25). இவர்களுக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. வினோத் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 11.15 மணி அளவில் மீனா தனது குழந்தைக்கு தோட்டத்தில் இருந்த கிணறு அருகே நின்றுக் கொண்டு சாப்பாடு கொடுத்ததாக கூறப்படுகிறது.

தாய், குழந்தை பலி

அப்போது மோட்டாரை இயக்குவதற்காக மீனா குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றார். இந்த நேரத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை சுபஸ்ரீ எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். இதில் தண்ணீரில் மூழ்கி மீனா மற்றும் குழந்தை சுபஸ்ரீ இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு படையினர் வந்து இருவரது உடல்களையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்