பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது - கே.பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2022-12-05 11:20 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு மற்றும் தனியார்த்துறையில் வேலைவாய்ப்பிற்கு ஒப்பந்தம் அடிப்படையில் தான் ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்தால், அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி விடும். மத்திய அரசு பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட வேண்டும் என சட்டவிதிகளை மாற்றி வருகிறது.

தமிழக அரசு கூட ஒப்பந்தம் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. இதுஎதிர்காலத்தில் இளைய சமுதாயத்திற்கு சோதனைகளை உருவாக்கும். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க நடவடிக்கை மேற்கொள்வதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்