தேவந்திர குலவேளாளர்கள் பேரமைப்பினர் 75 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சியில் தேவந்திர குலவேளாளர்கள் பேரமைப்பினர் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருங்காபுரி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி பில்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி களஞ்சியம். இவர் கொலை செய்யப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் கொலையாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து தமிழ்நாடு தேவந்திர குலவேளாளர்கள் பேரமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் சட்டவிரோதமாக கூட்டம் கூடியதாகவும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தேவந்திர குலவேளாளர்கள் பேரமைப்பின் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட 75 பேர் மீது திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.