அனுமதி இன்றி செங்கல் சூளை நடத்தியவர் மீது வழக்கு

திருக்குறுங்குடி அருகே அனுமதி இன்றி செங்கல் சூளை நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-14 19:57 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பஞ்சாயத்து மாவடியில் அனுமதி இன்றி செங்கல்சூளை நடத்தப்பட்டு வருவதாக வருவாய்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவடியில் இயங்கி வந்த செங்கல்சூளையில் ஆய்வு நடத்தினர். இதில் அந்த செங்கல்சூளை அனுமதி இன்றி நடத்தப்பட்டதும், செங்கல்சூளைக்கு 10 அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுபற்றி நாங்குநேரி மண்டல துணை தாசில்தார் கோமதி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அனுமதி இன்றி செங்கல்சூளை நடத்தியதாக மாவடியை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 56) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்