பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-17 19:02 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி வேம்பு(வயது 45). இவருக்கும், அதே பகுதியில் 7-வது தெருவில் வசிக்கும் பாக்யராஜுக்கும்(37) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வேம்பு ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு சென்று வந்தபோது, அவரை பாக்யராஜ் வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து வேம்பு ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்