குட்கா விற்றவர் மீதான வழக்கை வேறு விசாரணை அதிகாரிக்கு மாற்ற வேண்டும்

முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யும் வரை கைது செய்யவில்லை.எனவே குட்கா விற்றவர் மீதான வழக்கை வேறு விசாரணை அதிகாரிக்கு மாற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-05-31 20:24 GMT

மதுரை,

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மல்கான். இவரும், மற்றொருவரும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகில் குட்கா விற்பனை செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அஜ்மல்கான், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை மனுதாரர் விற்பனை செய்துள்ளார். மனுதாரர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யும் வரை, அவரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

எந்த அதிகாரி தனது கடமையை சரியாக செய்வாரோ, அவரிடம் மனுதாரரின் வழக்கை மாற்றுவது தொடர்பான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்