ஊராட்சி செயலாளரை தாக்கிய விவசாயி மீது வழக்கு

ஊராட்சி செயலாளரை தாக்கிய விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-03 18:42 GMT

கந்தர்வகோட்டை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் சக்திவேல் (வயது 40). இவர் தனது வீட்டில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த விவசாயி தங்கப்பன் என்பவர் தனது மனைவியின் தங்கைக்கு 100 நாள் திட்டத்தின் கீழ் பணி வழங்குமாறு கேட்டார். இதையடுத்து, ஊராட்சி செயலாளர் அதற்குரிய மனுவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த தங்கப்பன் ஊராட்சி செயலாளரை தனது மோட்டார் சைக்கிள் சாவியால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் தங்கப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்