காதலித்து விட்டு மாணவியை திருமணம் செய்ய மறுத்த வங்கி மேலாளர் மீது வழக்கு

காதலித்து விட்டு மாணவியை திருமணம் செய்ய மறுத்த வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-29 17:51 GMT

கரூர், 

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம். இவர் கரூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் திருமாநிலையூரை சேர்ந்த மாணவி ஒருவரை கடந்த 11 மாதங்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் மாணவியை திருமணம் செய்ய மறுத்து தகாதவார்த்தையால் சண்முகசுந்தரம் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, சண்முகசுந்தரம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்