கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Update: 2023-09-16 18:45 GMT

திருக்கோவிலூர், செப்.17-

திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் போலீஸ் நிலைய வளாகத்தில் விபத்து வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கார் முழுவதும் பரவி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலுர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது. தொடர்ந்து காருக்கு யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்