சிங்காரப்பேட்டை அருகேகுட்கா கடத்தி வந்த கார் பள்ளத்தில் பாய்ந்தது

பெங்களூருவில் இருந்து குட்கா கடத்திய போது சிங்காரப்பேட்டை அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-09-22 19:45 GMT

ஊத்தங்கரை

பெங்களூருவில் இருந்து குட்கா கடத்திய போது சிங்காரப்பேட்டை அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

கார் கவிழ்ந்தது

பெங்களூருவில் இருந்து கார் ஒன்று நேற்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி சென்றது. சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாய்க்கனூர் பிரிவு ரோட்டில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சிங்காரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 12 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது குட்கா இருப்பது தெரியவந்தது.

குட்கா பறிமுதல்

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்கா கடத்தி வந்தபோது கார் கவிழ்ந்ததும், இதனால் டிரைவர் தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார், குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மற்றும் குட்கா கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்