தேயிலை தோட்டத்துக்குள் கார் கவிழ்ந்தது

கூடலூர்-ஊட்டி சாலையில் தேயிலை தோட்டத்துக்குள் கார் கவிழ்ந்தது.

Update: 2023-01-08 18:45 GMT

கூடலூர், 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத். இவரது மனைவி ஷகலா (வயது 32). இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு காரில் இர்ஷாத் தனது குடும்பத்தினருடன் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். நேற்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, ஊட்டியில் இருந்து தங்களது சொநத ஊருக்கு காரில் புறப்பட்டனர். காரை ஷகலா ஓட்டினார்.

கூடலூர் 27-வது மைல் பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து வளைவான பகுதியில் வந்த போது தேயிலை தோட்டத்துக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஷகலா படுகாயம் அடைந்தார். இர்ஷாத், 2 குழந்தைகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து கூடலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்