100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

Update: 2023-05-17 23:15 GMT

பந்தலூர்

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியை சேர்ந்தவர் அகமது கபீர். இவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். நாடுகாணி வழியாக ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள வளைவில் வந்த போது, காரின் டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த அகமது கபீர் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் பள்ளத்தில் இருந்து அவர்களை மீட்டனர். மேலும் காரை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்