மின்கம்பத்தில் கார் மோதி கவிழ்ந்தது

திசையன்விளை அருகே மின்கம்பத்தில் கார் மோதி கவிழ்ந்தது.

Update: 2022-10-20 19:38 GMT

திசையன்விளை:

வள்ளியூரில் இருந்து திருச்செந்தூரை நோக்கி நேற்று இரவு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. திசையன்விளை அருகே மன்னார்புரத்தை அடுத்த முத்தம்மாள்புரம் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள 2 மின்கம்பங்கள் மீது மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் வந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்