ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-06 21:01 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 30-4-2022 வரை ஏற்பட்ட காலிப்பதவியிடங்களுக்கு வருகிற 9-ந் தேதியன்று தற்செயல் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு உறுப்பினர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டு உறுப்பினர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆகிய காலிப்பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தை இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும். இதை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

---

Tags:    

மேலும் செய்திகள்