முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு...

நெல் கொள்முதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் முக ஸ்டாலின் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2022-10-14 15:07 GMT

சென்னை,

தமிழக சட்டசபை வருகிற 17-ந் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

வரும் அக்டோபர் 17 ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்க உள்ளவை, புதிய மசோதாக்கள் தாக்கல் செய்தல் முதலியன குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வது, நெல் கொள்முதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளதாக  கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்