தொழில் அதிபர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
தூத்துக்குடியில் தொழில் அதிபர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் தொழில் அதிபர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தீவைப்பு
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. தொழில் அதிபர். இவர் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி இருந்தாா்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
மேலும் பக்கத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் வீட்டின் முன்பு மர்மநபர்கள் பட்டாசை வீசிவிட்டு சென்றனா்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தொழில் அதிபர் காரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.