பஸ் மோதியது; மோட்டார்சைக்கிளில் சென்றவர் சாவு

பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்

Update: 2023-07-15 20:32 GMT


சிவகங்கை மாவட்டம் கீழடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானபாண்டி (வயது 29). சம்பவத்தன்று இவர் மதுரை மாட்டுத்தாவணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு நுழைவு வாயிலில் சென்ற போது தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த ஞானபாண்டியின் தலையின் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. அதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்