செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர்
வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு செல்போனில் பேசியபடி டிரைவர் பஸ் ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அரசின் விதிமுறைகளை மீறி டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டி செல்கிறார்.
மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுக் கொண்டும் பஸ்சை ஓட்டி வருகிறார். பயணிகளுடன் செல்லும் பஸ்சில், செல்போனில் பேசியபடி ஓட்டுவது தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.