பஸ், கார்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு

வேலூரில் பஸ், கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-22 12:30 GMT

பஸ், கார்கள் மோதல்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அந்த பஸ்சுக்கு முன்னால் 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன்சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையை இணைக்கும் பகுதியை தாண்டி சிறிது தூரத்தில் சென்றபோது ஒரு காரின் பின்னால் மற்றொரு காரும், அந்த காரின் பின்னால் அரசு பஸ்சும் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார்களும் அரசு பஸ்சும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த உடன் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு போலீசாரும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்